Sri Prasanna Venatesa Suprabhatham Part01 || Sri Prasanna Venkatesa || Perumal || Vijay Musicals
Hellow guys, Welcome to my website, and you are watching Sri Prasanna Venatesa Suprabhatham Part01 || Sri Prasanna Venkatesa || Perumal || Vijay Musicals. and this vIdeo is uploaded by Vijay Musical at 2017-10-14T01:00:52-07:00. We are pramote this video only for entertainment and educational perpose only. So, I hop you like our website.
Info About This Video
Name |
Sri Prasanna Venatesa Suprabhatham Part01 || Sri Prasanna Venkatesa || Perumal || Vijay Musicals |
Video Uploader |
Video From Vijay Musical |
Upload Date |
This Video Uploaded At 14-10-2017 08:00:52 |
Video Discription |
Sri Prasanna Venatesa Suprabatham Part01 || Tamil Lyrical Video || Singer : Jayasreebala || Composer : P Senthilkumar || Music : Sivapuranam D V Ramani || Video : Kathiravan Krishnan || Tamil Devotional || Vijay Musicals || Lord Prasanna Venkatesa || Gunaseelam || Suprabhatham || Purattasi, Perumal, venkateswara, tirupati, thirupathi, tirupati kudai, balaji, Purattasi Saturday, yedukondala, Seshadhri, Govinda, Padmanabha, Rangaraja, Rangaswamy, Ranganathan, Garuda Skandha,Vasudeva, thirumala, srinivasa, narayana
Lyrics :
ஓம் ஆனந்த மழைபொழியும் வைகுண்டம் குணசீலம்
காவிரிக் கரையோரம் கண்மலரும் மலர்வனம்
திருமகள் திருவருளை பொழிகின்ற திருக்கோலம்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே வெங்கடேசா
கண்மலர்வாய் கண்மலர்வாய் பிரசன்ன பெருமாளே
கண்மலர்வாய் கோவிந்தனே கண்மலர்வாய்
கண்மலர்வாய் ஸ்ரீனிவாசனே கண்மலர்வாய்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே வெங்கடேசா
அருணமணிக்கிரணங்கள் அதிகாலை எழுந்ததுவே
கருணைக்கடலே உலகலந்தவனே திருவேங்கடவுடையானே
மூவுலகமும் செழித்தோங்க பேரருள் பொழியும் எம்பெருமானே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே வெங்கடேசா
வேண்டுவோர்க்கு வேண்டும்வரம் தந்திடும் எம்பிராட்டியே
திருமாலும் திருக்கண் மலர்வது உன்மடியே
திருவருளைப்பெற திருக்கண் மலரச்செய்வாய் மஹாலக்ஷ்மியே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே வெங்கடேசா
திருமகள் துயிலெழுந்து திருவருளை தந்திடவே
திருமாலே உனையெழுப்ப பாற்கடல் வந்தனரே
கண்திறந்து மூவுலகும் காத்திடவே பார்த்திடுவாய்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே வெங்கடேசா
குணசீல முனிவர்க்கு பேரருள் புரிந்த பிரசன்ன பெருமானே
காவிரிக் கரையில் குடிகொண்ட கோமகனே கோவிந்தனே
பெருகருணைக்குறைவிடமே திருவேங்கமுடையானே ஸ்ரீனிவாசனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே வெங்கடேசா
குறையிலா குன்றே கோவிந்தனே குணசீலப் பெருமானே
நிகனச முனிவர் போற்றிய விமலனே நிர்மலனே
காவிரி நீராடி திருமஞ்சன தீர்த்தங்கள் வந்ததுகாண்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே வெங்கடேசா
திசையெட்டும் நவகிரஹங்களும் நலம்காண வந்தனரே
தேவரும் துதிபாடி திருவருளைப் பெற்றனரே
விடிகின்ற பொழுதெல்லாம் விளங்கிடவே அருள்புரிவாய்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
அகண்ட காவிரியில் அனுஷ்டானத்துடன் அதிகாலை நீராடி
அநவரதம் உனையெண்ணி மனம்கரைந்து துதிக்க
ஞானமும் செல்வமும் சகலமும் நல்கிடும் நாராயணா
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
திருச்சங்கம் திருஆழி திருக்கரங்களில் தாங்கியவா
பிரபஞ்சத்தை காப்பவனே பிரபஞ்சமரத்தடியில் எழுந்தளியவா
நன்மையையும் செல்வமும் நாளும் பெருகிட வரமருள்வாய்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
ஏவல் பில்லி சூன்யங்கள் தகர்த்திடும் பரமதயாளா குணசீலா
மந்திர தந்திரங்கள் மனம்மாற்றும் எந்த்ரங்கள் மாய்ப்பவனே
மூவரும் தேவரும் முனிவரும் கண்குளிர உன்னைக்கண்டனரே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
பேயும் பிசாசும் சித்தத்தை குலைக்கின்ற பிரமையும்
மாறாத பிணிகளும் வாட்டிடும் அசுரரும் மாயையும்
சொல்லாமல் ஓடிடும் உன் கடைக்கண் பார்வையை கண்டதும்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
மந்தாரைப்பூக்களால் மாலையை சூட்டவே மாதவம் செய்தோமோ
தாமரைக்கண்ணனே மணம்கமழும் துளசியில் மாலைகள் சூட்டினோமே
அழகிய மலர்களை மலரடி சேர்க்கவே திருவருள் செய்வாயே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
எல்லாம் அறிந்தவனே எங்கும் உறைபவனே ஏழுமலையானே
நாவிலே உன்நாமம் நாள்தோறும் சொல்லிடவே நாடிடவே
முனிவரின் மனத்தாமரை ராஜ ஹம்சமே போற்றிடவே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
திருக்கையில் ஆழியும் சங்கும் அழகுடன் பிரகாசிக்குமே
சந்திரனும் சூரியனும் கண்களால் கருணை மழை பொழியவே
பூமகளும் திருமகளும் வருடிடும் திருவடியை தினம்காணவே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
அயனும் ஹரனும் தேவாதிதேவரும் நின்சேவை காண்பதற்க்கே
குணசீலமுனிக்கு அருள்செய்த ஆதிநாராயணனே பத்மநாபா
தேவர்கள் போற்றிடும் திமலைவாசனே திருமகள் நாதனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
ரத்ன கிரீடமும் குண்டலமும் உன்னழகை கூட்டிடுமே
கவுஸ்துப மாலையும் ஹாரமும் பீதாம்பரமும் பிரகாசிக்குமே
நீலத்திருமேனி இன்னலை தீர்த்திடுமே சுபங்கள் சேர்த்திடுமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
ஞானவர்மண் தவப்பயனே புற்றிலே தோன்றிய புருசோத்தமனே
பாலினை பருகிய பரமாத்மனே பாண்டுரங்கனே
ஞானத்தை அமுதமாய் பொழிந்திடுவாய் பக்தவச்சலனே பரமனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
சோழமன்னன் திருப்பணியில் உன்னாலயம் எழும்பியதே
மைக்கானஸ சாஸ்த்ரவழி பிரகாரங்கள் அமைந்ததுவே
குணசீலத்தில் கோயில்கொண்டு குறையெல்லாம் தீர்ப்பவனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
சேஷசயனனே கருட வாகனனே அடியவர்க்கருள்பவனே
கஜேந்திரனே காத்திடக் கணத்தில் வந்த ஆதிமூலனே
சேஷனின் கருடவாஹனமாய் சேவை சாதிப்பரே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
கையெனக்காப்பவனே காணொளியை தருபவனே கண்ணனே கண்மணியே
மண்டல நோன்பிருந்து ஷுரதேவன் கண்ணார கண்டானே
அண்டியவர்க்கு அருளைபொழியும் ஆதிமூலனே அனாதரக்ஷகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
சந்ததியைத் தந்து ஹேமபுரம் தழைக்க தயைசெய்த தயாநிதியே
ஊமைக்கு குரல் தந்த குணசீல பெருமானே ப்ரசன்னனே
அகம் எனும் ஆலயத்தில் அமர்ந்தவனே மங்கை மணாளனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
பிரம்மனுக்கு அருள்செய்தாய் வேதங்கள் காத்தாய் வேதநாயகா
தேவரும் அசுரரும் அமுதத்தைப் பெற்றிடவே பாற்கடல் தந்தாய்
பக்திக்கு வித்தான பிரஹலாதன் சொல்காக்க நரசிம்மன் ஆனாய்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா
அந்தணன் பகுப்ரஜன் முடவனாய் உனைத்துதித்தான்
மண்டல விரதத்தால் போற்றினான் பணிந்தான் பரந்தாமனே
கழல்தந்து மோக்ஷமும் அருளிய கருணைக்கடலே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் குணசீலனே ஸ்ரீநிவாஸா |
Category |
Music |
Tags |
Sri Prasanna Venatesa Suprabatham Part01 Tamil Lyrical Video | Singer : Jayasribala | Lyrics : P Senthilkumar | Music : D V Ramani | Video : Kathiravan Krishnan | Tamil Devotional | Vijay Musicals | Lord Prasanna Venkatesa | Gunaseelam | Suprabhatham | Purattasi | Perumal | venkateswara | tirupati | thirupathi | tirupati kudai | balaji | Purattasi Saturday | yedukondala | Seshadhri | Govinda | Padmanabha | Rangaraja | Rangaswamy | Ranganathan | Garuda Skandha | Vasudeva | thirumala | srinivasa | narayana |
More Videos